Tuesday, 24 December 2013

பசுமையான பள்ளிக்கால நினைவுகள்...


தனிமை வாட்டிக்கொண்டிருந்த ஈரமான இரவுப்பொழுதில் பல நினைவுகளோடு மனக்கதவை தட்டி தூக்கத்தை மறக்கடிக்க செய்கிறது பள்ளிக்கால ஞாபகங்கள்
மனத்திரையில் சிறகடிக்கும் சில நினைவுகளோடு தூக்கம் விட்டு சில நிமிடங்கள்..

பள்ளி கால ஞாபகங்களை மீட்டிப்பார்க்கும் போது மனசுக்குள் ஒரு வித்தியாசமான இன்ப உணர்வு..
நாம எவ்ளோ தான் வாழ்க்கைல முன்னேறினாலும், நம்மளோட ஆரம்பகாலத்தை நெனச்சுப் பார்க்கும்போது ஆச்சர்யமா இருக்கும்.

அது சில நேரம் சிரிப்பைத் தரும்.. சில சமயம் அழுகையை தரும்...
ஆனா அந்த நினைவுகள் என்னைக்கும் நம்ம மனச விட்டு நீங்குறதில்ல.

அதுபோலத்தான் எனக்கும் சில நினைவுகள் அப்பப்போ மனத்திரையில் சிறகடித்துக்கொண்டிருக்கும்...
அது சந்தோசமா அல்லது ஒரு வகை வலியா ஒன்னுமே புரியல்ல என்றாலும் அந்த உணர்வு மனசுக்கு சுகமா இருக்கு..

பாடசாலை வாசல் நோக்கி, ஆயிரம் கனவுகளோடு நுழைந்த,
எத்தனையோ மாணவர்களுக்குள் நானும் ஒருத்தன்..

ஸ்கூலுக்கு போறதுக்கு நேரமாச்சி எழும்புடா.. எழும்பு..
அம்மாட குரல் காலைல 6 மணிக்கே எழுப்பிடுவாங்க..
காலைல 6மணிக்கு எழும்புறதா?.. (எவ்வளவு கஷ்டம்னு இப்பதான் விளங்குது...)

ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னால அம்மாட கையால போட்டுத்தந்த கோப்பி..
அது வெறும் கோப்பியல்ல அன்பு பாசம் எல்லாம் கலந்தது..
வீட்ல இருந்து கொஞ்ச தூரம் நடந்துதான் போகனும்

வெள்ளை சேட் வெள்ளை காற்சட்டை
கழுத்தில் ஒரு பேக்..
ஏகப்பட்ட நண்பர்கள்..
நிறைய கற்பணைகள், கனவுகள்
கவலை மறந்து எப்போதும் சந்தோஷம்...
மீண்டும் கிடைக்காத அந்த நிமிடங்கள்
இன்னும் வட்டமிட்டுக்கொண்டிருக்கின்றன மனத்திரையில்..

பாட வேளைகளை கட் அடிச்சி புளியம்மரத்தடியில் அரட்டை அடித்த நாட்கள்
ஸ்கூலுக்கு கட் அடிச்சி நண்பர்களோடு சேர்ந்து பார்த்த படங்கள் ..
ஆசிரியர் இல்லாத நேரத்தில் வகுப்பறையில் போட்ட கும்மாளம்..
சின்ன சின்ன சண்டைகள் வித வித குதூகலங்கள் நிறைந்த அற்புத நாட்கள் அவை..

பள்ளி வாழ்க்கையைப் போலவே எப்பவுமே மறக்க முடியாத பாடசாலை தான் அறபா..
ஆரம்பம் முதல் உயர்தரம்வரை அறபா தான்..
இப்போ நூற்றிருபத்தைந்தாண்டு தாண்டி தலைவர்கள் பலரை உருவாக்கி சாதனைகள் பல புரிந்து கொண்டிருக்கின்றது நான் கற்ற அந்த பாடசாலை.

இலங்கை தீவெங்கும் அறிவொளி ஏற்றிடும் கலையகம் வெலிகம அறபா”..
பாடசாலைக் கீதத்தின் ஒரு வரி தான் இது..
காலைக் கூட்டத்தின் போது ஒவ்வொரு நாளும் கேட்கக்கூடியது..

சிறியவனாய் சென்ற எனக்கு சிந்திக்க கற்று கொடுத்ததும் அந்த அறபா..,
எனக்கு இப்போ ஒரு முகவரி கொடுத்திருப்பதும் அந்த அறபா தான்..,

முகவரி தந்த பாடசாலை
கூட இருந்த சொந்தங்களையும் நண்பர்களையும் பிரித்து விட்டது..

காலத்தின் தேவை ஊரையும் பிரிந்து உறவையும் பிரிந்து
நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டு ஒரு வாழ்க்கை..

புதுப்புது நட்புகள் கிடைச்சாலும் ஆரம்பகால நட்புக்களை மறக்கவே முடியல

நான் இழந்த அந்த இதமான நாட்களை
மறுபடியும் மீட்டுக் கொள்கின்றேன்..
பள்ளிப் பருவமதை பசுமையுடன்
திரும்பிப் பார்க்கிறேன் இந்த இதமான இராப்பொழுதில்
இரண்டு விழிகள் மட்டுமே துணையாய்…

Friday, 5 July 2013

முா்ஸியின் பதவி கவிழ்ப்பு மூலம் எதிர்பார்ப்பது ஜனநாயகமா?எகிப்தின் வரலாற்றில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதி முஹம்மது முா்ஸி. நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாக்களிப் பின் மூலமே ஜனாதிபதியானார். ஜனநாயகத்தின் அடிப்படையில்தான் முர்ஸி ஆட்சிக்கு வந்தார். ஆகவே அங்கு இராணுவப் புரட்சி எதற்கு? அதனை அமெரிக்கா ஆதரிப்பதன் மா்மம் என்ன?
எகிப்தில் ஷரீஆ அடிப்படையிலான ஆட்சி உருவாகுவதை அமெரிக்காவோ மேற்கத்திய நாடுகளோ விரும்பவில்லை. இஸ்லாமிய அடிப்படையிலான ஆட்சி மாற்றம் எகிப்தில் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் அமெரிக்கா மிகவும் விழிப்பாக உள்ளது.

இதேபோன்றுதான் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் பதவி விலகியதை அடுத்து நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட எகிப்தின் இராணுவ ஆட்சியாளர்கள், அரச எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டிருந்த பொதுமக்களை அமைதியாக இருக்குமாறும் விரைவில் அங்கு மக்களாட்சியை ஏற்படுத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாகவும் உறுதியளித்தது. அவர்கள் உறுதியளித்தபடி மக்களால் தெரிவுசெய்யப்பட்வா்தான் முஹம்மது முா்ஸி.

இந்தநிலையில் எகிப்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள இராணுவத்தினர் விரைவில் ஜனநாயக மக்களாட்சி முறை ஒன்று ஏற்படும் என்ற அறிவித்தலை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வரவேற்றுள்ளார். அமெரிக்கா எதிர்பார்க்க கூடிய ஜனநாயகம் எவ்வாறானது? மக்கள் ஆதரவு பெற்ற தலைவர்களை ஒழித்துக்கட்ட அமெரிக்க தலைவர்கள் எப்போதும் முயன்று கொண்டே இருப்பார்கள்.

அரபு உலகில் ஜனநாயகம் என்பது நீண்ட நெடிய வராலாற்று பாரம்பரியம் கொண்டது. இருந்தபோதிலும் அரபுலகின் ஜனநாயகம் மேற்குலக சக்திகளால் எப்போதும் நசுக்கப் பட்டே வந்துள்ளன. அரபுலகில் ராணுவப் புரட்சி ஏற்படுத்தி ஆட்சிகளைக் கவிழ்ப் பதே அமெரிக்காவின் அடிப்படைப் பணியாக இருக்கின்றது.

இதேவேளை முா்ஸிக்கு ஆதரவானவா்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். அதேபோன்று இராணுவ புரட்சி மூலம் ஏற்படுத்தப்பட்ட புதிய ஆட்சியை ஏற்கமாட்டோம். அந்த ஆட்சிக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம். கைது செய்துள்ள முா்ஸியையும் மற்ற தலைவா்களையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று முஸ்லிம் சகோதரத்துவ கட்சி தெரிவித்துள்ளது. ஆகவே ஜனநாயக முறைப்படி மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தலைவரை பதவி நீக்கிவிட்டு சா்வதேசம் எதிர்பார்கக்கூடிய ஜனநாயகத்தை மீண்டுமொரு முறை எகிப்தில் உருவாக்க முடியுமா?

Wednesday, 19 September 2012

பறக்கும் மீன்கள்

பறக்கும் மீன்கள் உலகம் முழுவதும் குறிப்பாக சூடான வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல கடல் பகுதியில் வசிக்கின்றது. இவை ஒழுங்குபடுத்தப்பட்ட நீர்மூழ்கி கப்பல் வடிவத்தில் இருக்கும். மேற்பரப்பை உடைக்கவும் நீருக்கடியில் வேகத்தை அதிகரிக்கவும், மேலும் அவற்றின் பெரிய, விங் போன்ற pectoral துடுப்புகள் அவர்களுக்கு காற்றில் பறக்க உதவுகிறது.

பறக்கும் மீனினம் பல உண்டு. அவைகள் தங்களை இரையாக்கி கொள்ள வரும் மற்ற கடல் உயிரினங்களில் இருந்து தப்பிக்க, பறக்கும் திறன் பெற்றிருக்காலாம் என்று கருதப்படுகிறது. பிளாங்டன் உள்ளிட்ட மீன்கள் உணவுக்காக பறக்கும். பறக்கும் மீன் துடுப்புகள் எல்லாம் மேல் மடல்களைக் காட்டிலும் நீண்ட கீழ் மடல் கிளைவிட்ட வால்களில் இருக்கிறது. பல இனங்கள் இடுப்பு துடுப்புகள் பெரியதாக இருக்கும் இவை நான்கு இறகு பறக்கும் மீன் எனப்படும்.

ஒரு மணி நேரத்திற்கு 37 மைல் (60 கிலோமீட்டர்) பறக்கிறது. பறக்கும் மீன் நீரினுள் இருக்கையில் தன் இறக்கை போன்ற துடுப்பை, உடலோடு ஒட்டியவாறு வைத்திருக்கும். வேகமாகச் செல்ல நினைக்கையில், நீரினுள் இருக்கும் போதே பறப்பதற்கு முன் ஓடுதளத்தில், ஓடும் விமானம் போல் வேகமெடுத்து, நீரின் மேற்பறப்பை நோக்கி நீந்தி வந்து, நீர்பரப்பை அடைந்ததும் தன் பக்கத்துடுப்புகளை முழுவதும் விரித்துத் துள்ளித் தாவும். பெரிய விசை நீருக்கடியில் பெறுவதன் மூலம் மேல்நோக்கி நான்கு இறகு பறக்கும் மீன் மேற்பரப்பை உடைக்கிறது சில நேரங்களில் 4 அடி (1.2 மீட்டர்) அதிகமான உயரங்களை அடைந்து 655 அடி (200 மீட்டர்) வரை, நீண்ட தூரம் காற்றில் பறக்கிறது.
There was an error in this gadget