Friday 6 August 2010

அன்புள்ள தாயே!!!...

எனது பதிவிலே தாயைப் பற்றி கொஞ்சம் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். உண்மையிலே தாயப்பற்றி எவ்வளவு தான் சொன்னாலும் தாயன்பை அளவிட்டுக் கூறமுடியாது. அவ்வளவு ஆழமானது தாயன்பு.
கோடி பணமிருந்தும் நெஞ்சுக்குள்ள இன்பமில்ல....
என் தாயின் மடியில தான் என்னைக்குமே துன்பமில்ல....
என்றொரு பாடல் வரி (எனக்கு பிடித்த பாடல்) எனது மனதை அடிக்கடி தொட்டுக்கொண்டே இருக்கும். இப்படி தாயைப் பற்றி நிறைய சொல்லிட்டே போகலாம்.



கண்களில் உறக்கமில்லை - வயிற்றில்
நான் தரும் வேதனை பொறுக்கவில்லை..
என்றென்னை நீ வெறுக்கவுமில்லை
பிஞ்சு முகம் காண மனம் சுளிக்கவுமில்லை..

ஈரைந்து மாதங்கள் எனை தாங்கி நின்றாயே!
சுக வாழ்வு நான் வாழ தினம் பாலூட்டி வளர்த்தாயே!

நீராட்டி சீரட்டி நிலாக்காட்டி ஊணூட்டி
கவிபாடி தாலாட்டி நான் தூங்க உன்தூக்கம் இழந்தாயே!

இரவெல்லாம் விழித்திருந்தாய்
பகலெல்லாம் பசித்திருந்தாய்
தன் நெனப்பே மறந்திருந்தாய்
எனக்கேதும் ஆனதென்றால்...

எந்நாளும் நலமாக பார்மீது நான் வாழ
உன்வாழ்வு தந்த அன்புள்ள என் தாயே!
உன்கடன் நான் தீர்க்க
ஒரு காலும் முடியாது பாரினிலே!


தாயைப் பற்றி சொல்றதுன்னா என்னால மட்டுமல்ல கேக்குற ஒங்களால கூட இதுதான் என்று வரையறுத்து கூறவே முடியாதுங்க. ஏன்னா உலகத்துல எல்லாப் பொருட்களுக்குமே பெறுமதி இருக்கு. ஆனா இந்த தாய்க்குலத்துக்கு என்னனங்க விலைன்னு யராவது கேட்டா என்னன்னு சொல்றது??? ஒரு தாய் நினைச்சா எத்தன பேர வேண்டுமானாலும் பெற்றெடுக்கவும் முடியும் தத்தெடுக்கவும் முடியும். மாறாக எத்தன பேரு நெனச்சாலும் ஒரு தாய பெற்றெடுக்கவோ தத்தெடுக்கவோ முடியவே முடியாதுங்க. எமக்கு இறைவன் தந்த பெரிய சொத்து இந்த தாய்


நான் இப்போ வளர்ந்துட்டேன். எனக்கு சின்ன வயசுல என் தாய் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாள். அதை கொஞ்சம் மீட்டிப் பார்த்தேன். என் தாய் பட்ட கஷ்டம் போலதான் உலகத்துல இருக்கிற ஒவ்வொரு தாயும் கஷ்டப்பட்டிருப்பாங்க. நீங்களும் கொஞ்சம் நெனச்சிப்பாருங்க.... என் தாய் பட்ட வேதனைய நெனக்கும் போது கண்களில் இருந்து வடிந்த துளிகளை சேர்த்து சில வரிகளில் கவிதையாக வடித்திருக்கின்றேன். நீங்ககூட நிறைய திறமைசாலியா இருப்பீங்க. நிறைய கவிதை கூட எழுதுவீங்க. இதப் படிச்சிட்டு இது என்னங்க வெறுமனே ரெண்டு வரி தான் அப்டீன்னு நெனக்காம ஏதோ என் தாயப்பற்றி கொஞ்சம் யோசிச்சேன் ஏதோ என்னால முடிஞ்ச ரெண்டு வரி எழுதி இருக்கேன். ஒங்க கருத்து என்னன்னு கட்டாயம் சொல்லிட்டு போங்க.

மறுபடியும் வர்ரேன்....

1 comment:

Thanks.. ur welcome