Saturday 18 September 2010

மஸ்ஜிதுல் அக்ஸா மீதான ஆக்கிரமிப்புக்கு வயது 62......

இஸ்லாமியர்களின் சரித்திர புகழ்மிக்க, அருள்பாலிக்கப்பட்ட புனித பூமியான பலஸ்தீனை இரண்டாம் கலீபா உமர் (ரலி) அவர்கள் கைப்பற்றி தீனுல் இஸ்லாத்தையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டினார்கள்.நீதியையும் அமைதியையும் கடைபிடித்தார்கள். அந்த பூமியில் நூற்றாண்டுகாலமாக புனித தீனுல் இஸ்லாம் நிலைகொண்டிருந்தது. முஸ்லில்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள் என்று பலதரப்பட்ட மதத்தவர்களும் மிகவும் அந்நியோன்னியமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்வதற்கு அன்றைய கலீபா உமர் (ரலி) அவர்கள்வழி செய்திருந்தார்கள் .அனைவருக்கும் நீதி கிடைத்தது. நிம்மதி இருந்தது. அது அன்றைய கிலாபத்துடைய காலம்.


என்றாலும் 1917ம் ஆண்டு அமெரிக்காவினதும், பிரித்தானியாவினதும் ஏகாதிபத்தியத்தினால் அந்தப் புனித பலஸ்தீன பூமி சூரையாடப்பட்டு, 1948ம் ஆண்டில் அந்த பூமியின் சொந்தக்காரர்களல்லாத, மேற்குலகில் அலைக்கழிந்து கொண்டிருந்த வேறொரு அந்நிய சமூகத்திற்கு தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டது. இந்த அந்நிய சமூகமானது பிரித்தானியா போன்ற மேற்குலக நாடுகளால் காலாகாலமாக படுகொலைகளுக்கும் பல இன்னல்களுக்கும் உள்ளாகி, ஐரோப்பியர்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட யூத சமூகமாகும். இந்த யூத சமூகத்கை அகற்றுவதற்காக வேண்டி அவர்களுக்கு தாரைவார்த்துக்கொடுத்த இந்த புனித பூமி முற்றிலும் முஸ்லிம்களுக்கு சொந்தமானதே.இந்த புனித பூமியானது பல இஸ்லாமிய வரலாற்றுச்சிறப்பு மிக்கதானதாகும். நபி (ஸல்) அவர்களின் மிஃராஜ் பயனம் கூட இங்கிருந்தே மேற்கொள்ளப்பட்டது.


"தன் அடியாரை (கஃபாவாகிய) சிறப்புமிக்க பள்ளியிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு, இரவின் ஒரு பகுதியில் பயணம் செய்வித்தானே அத்தகையவன் மிகப்பரிசுத்தமானவன். (மஸ்ஜிதுல் அக்ஸாவகிய) அது எத்தகையதென்றால், நாம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை அபிவிருத்தியடையச் செய்துள்ளோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே (அழைத்துச்சென்றோம்.) நிச்சயமாக (உமதிரட்சகனாகிய) அவனே செவியேற்கிறவன், பார்க்கிறவன். (அலிஸ்ரா:1)"





எனவே பலஸ்தீனத்தின் வாடையைக்கூட நுகர்ந்திராத யூத சமூகத்தை அங்கே நிலைநாட்டுவதற்கு மிகக் கொடூரமான ஆட்சியொன்றை நிலைநாட்டினார்கள். இவ்வாறு உருவாக்கப்பட்ட அந்த கொடூர யூத அரசு அங்கிருந்த அமைதியை சீர்குழையச் செய்தது.அநியாயங்களையும் அட்டூழியங்களையும் அச்சமின்றி அதிகப்படுத்தியது.இனப்படுகொலைகளை சர்வசாதாரனமாசெய்ய ஆரம்பித்தது.இவ்வாறு இஸ்லாமிய கிலாபத் முறியடிக்கப்பட்டு, கொடூர ஆட்சி ஆரம்மிக்கப்பட்டு இன்று 60 ஆண்டுகளையும் தாண்டி 62 வயதாகிவிட்டது.என்றாலும் அந்தப்புனித பூமியின் விடிவுகாலம் வெகுதொலைவில் இல்லை என்பதும் உறுதி.




இன்றைய பலஸ்தீன முஸ்லிம்களின் நிலை....




No comments:

Post a Comment

Thanks.. ur welcome