Wednesday 19 September 2012

கண்ணகிபுரம்



வானொலி நேயர்களின் நாடகங்களைக் கேட்கும் தாகத்தை நிவர்த்தி செய்யும் முகமாக யங் ஏசியா தொலைக்காட்சி நிறுவனத்தினால் தயாரித்து, ஓகஸ்ட் 5ஆம் திகதி 2009 ஆம் ஆண்டு முதல் கண்ணகிபுரம் என்ற பெயரில் தமிழிலும் கண்ணகிபுர என்ற பெயரில் சிங்களத்திலும் புதன் மற்றும் வெள்ளிக்கிழைமைகளில் தொடர் நாடகத்தை இரு மொழிகளிலும் ஒலிபரப்பி வருகின்றது.

இலங்கையில் வாழும் மக்களுக்கிடையே எவ்வித பேதத்தையும் பார்க்காது, எல்லோரையும் ஒன்றாகவே நோக்கும் பண்பு இந்த நாடகத்தில் உள்ளடங்கியிருக்கின்றது. சகிப்புத்தன்மை, சகவாழ்வு என்பவற்றை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கண்ணகிபுரம் வானொலி நாடகம் சமூகமேம்பாட்டுக்கான மாற்றங்களை வெளிப்படுத்தி வருகின்றது. நீண்டகாலமாக நாட்டில் ஏற்பட்டிருந்த யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் மக்கள் உளவியல் ரீதியாக எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்பதையும் இந்த நாடகம் வெளிப்படுத்துகின்றது. மேலும் இலங்கை வாழ் மக்கள் மூன்று இனங்களாக வேறுபட்டு தனித்தனியாக வாழ்ந்து கொண்டிருந்ததை மாற்றியமைக்கக்கூடிய வகையில் இந்த நாடகத்தின் கதையம்சம் சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்நாடகமானது சமூகத்தில் உள்ள பிரச்சினைகளை வெளிப்படுத்தி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி சகல இனமக்களிடையே நல்லிணக்கப்பாட்டைக் கொண்டுவரும் எண்ணத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்காகவே யதார்த்த பூர்வமான கண்ணகிபுரம் என்ற ஒரு கிராமத்தை உருவாக்கி அதற்கு ஏற்புடைய வகையில் கதாபாத்திரங்கள் தெரிவு செய்யப்பட்டு, நல்ல கெட்ட கதாபாத்திரங்களின் ஊடாக வானொலி நேயர்களின் மனதில் நன்னெறியை வலுப்படுத்தக்கூடிய வகையில் கதையம்சம் அமைந்துள்ளது.

இந்த நாடகத்தொடர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தேசிய, வர்த்தக சேவைகளிலும் பிராந்திய ஒலிபரப்புச் சேவைகளான ரஜரட்ட எப்.எம்., கந்துரட்ட எப்.எம்., வயம்பஹன்ட, கொத்மலை எப்.எம்., தென்றல் எப்.எம்., பிறை எப்.எம்., மற்றும் யாழ்.எப்.எம் ஆகிய சேவைகளில் வாரத்திற்கு இரு தடவைகள் ஏககாலத்தில் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 6.45 மணிமுதல் 7 மணிவரையில் ஒலிபரப்ப்படுகின்றது. ஆயினும் தென்றல் எப்.எம். சேவைகளில் மாத்திரம் இந்த நாடகத்தொடர் அதேநாட்களில் பிற்பகல் 5.45 மணிமுதல் 6 மணிவரை ஒலிபரப்பாகி வருகின்றது.

No comments:

Post a Comment

Thanks.. ur welcome