Friday 5 July 2013

முா்ஸியின் பதவி கவிழ்ப்பு மூலம் எதிர்பார்ப்பது ஜனநாயகமா?



எகிப்தின் வரலாற்றில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதி முஹம்மது முா்ஸி. நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாக்களிப் பின் மூலமே ஜனாதிபதியானார். ஜனநாயகத்தின் அடிப்படையில்தான் முர்ஸி ஆட்சிக்கு வந்தார். ஆகவே அங்கு இராணுவப் புரட்சி எதற்கு? அதனை அமெரிக்கா ஆதரிப்பதன் மா்மம் என்ன?
எகிப்தில் ஷரீஆ அடிப்படையிலான ஆட்சி உருவாகுவதை
அமெரிக்காவோ மேற்கத்திய நாடுகளோ விரும்பவில்லை. இஸ்லாமிய அடிப்படையிலான ஆட்சி மாற்றம் எகிப்தில் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் அமெரிக்கா மிகவும் விழிப்பாக உள்ளது.

இதேபோன்றுதான் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் பதவி விலகியதை அடுத்து நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட எகிப்தின் இராணுவ ஆட்சியாளர்கள், அரச எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டிருந்த பொதுமக்களை அமைதியாக இருக்குமாறும் விரைவில் அங்கு மக்களாட்சியை ஏற்படுத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாகவும் உறுதியளித்தது. அவர்கள் உறுதியளித்தபடி மக்களால் தெரிவுசெய்யப்பட்வா்தான் முஹம்மது முா்ஸி.

இந்தநிலையில் எகிப்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள இராணுவத்தினர் விரைவில் ஜனநாயக மக்களாட்சி முறை ஒன்று ஏற்படும் என்ற அறிவித்தலை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வரவேற்றுள்ளார். அமெரிக்கா எதிர்பார்க்க கூடிய ஜனநாயகம் எவ்வாறானது? மக்கள் ஆதரவு பெற்ற தலைவர்களை ஒழித்துக்கட்ட அமெரிக்க தலைவர்கள் எப்போதும் முயன்று கொண்டே இருப்பார்கள்.

அரபு உலகில் ஜனநாயகம் என்பது நீண்ட நெடிய வராலாற்று பாரம்பரியம் கொண்டது. இருந்தபோதிலும் அரபுலகின் ஜனநாயகம் மேற்குலக சக்திகளால் எப்போதும் நசுக்கப் பட்டே வந்துள்ளன. அரபுலகில் ராணுவப் புரட்சி ஏற்படுத்தி ஆட்சிகளைக் கவிழ்ப் பதே அமெரிக்காவின் அடிப்படைப் பணியாக இருக்கின்றது.

இதேவேளை முா்ஸிக்கு ஆதரவானவா்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். அதேபோன்று இராணுவ புரட்சி மூலம் ஏற்படுத்தப்பட்ட புதிய ஆட்சியை ஏற்கமாட்டோம். அந்த ஆட்சிக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம். கைது செய்துள்ள முா்ஸியையும் மற்ற தலைவா்களையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று முஸ்லிம் சகோதரத்துவ கட்சி தெரிவித்துள்ளது. ஆகவே ஜனநாயக முறைப்படி மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தலைவரை பதவி நீக்கிவிட்டு சா்வதேசம் எதிர்பார்கக்கூடிய ஜனநாயகத்தை மீண்டுமொரு முறை எகிப்தில் உருவாக்க முடியுமா?

No comments:

Post a Comment

Thanks.. ur welcome