Wednesday 18 July 2012

ஊடகத்துறையில் முஸ்லிம்களின் பங்களிப்பு

இன்று உலகம் வெற்றயின் உச்சத்தை நோக்கி வேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்றது. இத்தனை வெற்றிக்குப் பின்னாலும் ஊடகத்துறையின் பங்கும், ஊடகத்துறையின் வளர்ச்சியும் வெகுவாக செல்வாக்குச் செலுத்துகின்றன. குறிப்பாக இன்று ஊடகங்கள் ஒரு நாட்டினுடைய அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் பாரிய பங்களிப்புச் செய்கின்றன. ஒரு சமுதாயம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், சவால்கள் என்பவற்றையும் எட்டிப்பார்த்து அவற்றை அலசி ஆராய்ந்து  மக்கள் எங்கிருந்தாலும் ஒரே நேரத்தில் அவர்களிடம் கொண்டு செல்வதிலும்;, அதேபோன்று அவர்களுடைய மனதில் உடனே தாக்கத்தை ஏற்படுத்துவதிலும் ஊடகங்கள் இன்று பெரும் பங்கு வகிக்கின்றன. இவ்வாறு ஒரு நாட்டினுடைய வளர்ச்சிக்கு ஊடகங்கள் எவ்வளவு துணை நிற்கின்றதோ  அதேபோன்று சிலசமயங்களில் ஒரு நாட்டினுடைய அல்லது ஒரு சமுதாயத்தினுடைய வீழ்ச்சிக்கும் இந்த ஊடகங்கள் காரணமாக அமைகின்ற சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. இதற்கு சமாகாலத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற நிகழ்வுகள் சான்றாகும்.

ஊடகத்துறையின் வளர்ச்சியில் பாரியதொரு மாற்றத்தையும் நவீனத்துவத்தையும் ஏற்படுத்தியது இணையத்தின் வருகையே. தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை என்று மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஊடகத்துறை Facebook, Twitter, Google+, Blogger போன்ற சமூக வலைத்தளங்களின் (Social Medias) வருகையால் பாரிய மாற்றம் கண்டுள்ளது. இவற்றை சிறியவர்கள், பெரியவர்கள், படித்தவர்கள், அரசியல்வாதிகள் என்று அனைத்து தரப்பினரும் பயன்படுத்துகின்றார்கள். நம்மிடம் இருக்கின்ற கருத்துக்களையும் செய்திகளையும் சுதந்திரமாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது வலைப்பக்கங்களை, சமூகவலைத்தளங்களை பயன்படுத்துகின்றோம். ஆதலால் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோரை குறிப்பாக புளோக் (blog) பாவனையாளர்களை கட்டுப்படுத்த முடியாத ஊடகவியலாளன் என்கிறார்கள். அந்தளவுக்கு ஊடகத்துறை வளர்ச்சி கண்டுள்ளது.

ஆனால் முஸ்லிம் சமுதாயத்தின் சிந்தனைகளும் செயற்பாடுகளும் குறிப்பிட்ட வட்டத்திற்குள்; உறங்கிக்கிடப்பதைத் தவிர, அதற்கு வெளியே அன்றாடம் என்ன நடக்கின்றது? இவற்றை முஸ்லிம்கள் எவ்வாறு எதிர்கொள்ள முடியும் என்பதை சிந்திக்க மறந்துவிடுகின்றார்கள். ஊடகத்துறை எந்தளவுக்கு வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கின்றதோ அதே வேகத்தில் இன்று உலகளாவிய ரீதியில் முஸ்லிம் சமுதாயமும், இஸ்லாமும் திட்டமிட்டு குறிவைத்து அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்று முஸ்லிம் சமுதாயத்துக்கும் ஊடகத்துக்கும் இடையிலான உறவு எவ்வாறு காணப்படுகின்றன என்பதை சற்று சுருக்கமாக தெளிவுபடுத்தி பராமுகமாக உறங்கிக் கொண்டிருக்கின்ற நம்முஸ்லிம் சமுதாயத்தை தட்டி எழுப்பி விழிப்படையச் செய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

ஊடகங்கள் மூலம் ஒன்றை ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். மக்களுடைய எண்ணங்களிலும் செயற்பாடுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சிறந்த ஒரு கருவிதான் ஊடகம். அந்தவகையில் யூதர்கள் ஊடகங்களை நன்றாகவே பயன்படுத்துகின்றார்கள். முஸ்லிம்களுடைய சிந்தனைகளையும் நடத்தைகளையும் அந்நிய கலாச்சாரங்களின் பக்கம் திசை மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். இன்று நாம் சிந்திப்பதுகூட நமக்குச் சொந்தமற்றதாக மாறி வருகின்றது. நமது அடையாளத்தை நாம் இழந்து வருகின்றோம். இவ்வாறு முஸ்லிம்களை திசைமாற்றும் ஒரு சூட்சுமமான கருவியாக இவர்கள் ஊடகங்களை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

அதேபால் ஹராமான பொருட்களை ஹலால் என்று ஊடகங்களின் மூலம் பொய்ப்பிரச்சாரங்களை மேற்கொண்டு ஹராத்தின்பால் முஸ்லிம்களை ஈர்க்கின்றனர். நாகரீகம் என்ற பெயரில் அநாகரிகத்தையும் அந்நிய பண்பாடுகளையும் இஸ்லாத்துக்குள் புகுத்தி இஸ்லாத்தை மாசுபடுத்துகின்றார்கள். இஸ்லாத்தை கலங்கப்படுத்துகின்றார்கள். இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களில் பிழை காண்கின்றார்கள். இஸ்லாமிய சட்டங்கள் நீதிக்கு புறம்பானது,  நடைமுறைக்கு ஒவ்வாதது, அடிப்படை உரிமைகளை மீறக்கூடியது என்று குறை சாடுகிறார்கள். இதனால் இஸ்லாம் வேறுபட்ட பல கோணங்களில் மக்கள் மத்தியில் தவறான முறையில் பரப்பப்படுகின்றன. முஸ்லிம்களிடையே பிளவுகளும் வேற்றுமையும் வளர்க்கப்படுகின்றன. காரணம் இன்று ஊடகம் மேற்கத்தியவாதிகளாலும் யூதர்களாலும் அடக்கி ஆளப்படுகிறன.

இன்று ஊடகங்களினூடாக இஸ்லாத்திற்கும் முஸ்லீம்களுக்கும் எதிரான பனிப்போர் மிகவும் உச்சக்கட்டத்தில் நடந்து கொண்டிருக்கின்றது. நம்முடன் இணைந்து வாழும் இஸ்லாமிய சமூகத்தினர் ஒடுக்கப்படுகின்றார்கள். முஸ்லிம் பெண்களுடைய அடையாளமாக காணப்படுகின்ற பர்தாவை தடை செய்கின்றார்கள். பர்தா அணிவதனூடாக முஸ்லிம் பெண்களின் முன்னேற்றத்தைத் தடுக்கின்றது, அவர்களுடைய சுதந்திரத்தைப் பறிக்கின்றது, பெண்களை அடிமைப்படுத்துகின்றது என்றெல்லாம் போலிப்பிரச்சாரங்களை ஊடகங்களின் மூலமாக மேற்கொள்வது மட்டுமல்லாமல், ஊடகங்களின் நாகரீக மோகத்தால் பெண்களின் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த மேற்கத்தியவாதிகள். உண்மையில் பெண்களுக்கும் சமூகத்தில் சம அந்தஸ்து வழங்கி அவர்ளை மதிக்க கற்றுக்கொடுத்ததும் அவர்களுக்கு வாழ்வளித்ததும் இஸ்லாம் மார்க்கமே.

இணையத்தின் பக்கம் சென்றால், சமூக வலைத்தளங்களினூடாக அன்றாடம் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கள் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம்களுக்கெதிராக தனியான இணையத்தளங்கள் உருவாக்கப்பட்டு அவற்றினூடாக அந்நிய சமூகத்தினரிடையே தப்பான கருத்துக்களை பரப்புவதில் மேற்கத்தியவாதிகள் குறியாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அநியாயத்தின் உச்சகட்டமாக நபி(ஸல்) அவர்களுக்கு எதிரான கேலிச் சித்திரங்களும் கட்டுக் கதைகளும் பத்திரிகைகளினூடாகவும் இணையத்தளங்களினூடாகவும் பரப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதேபோல முஸ்லிம்கள் திட்டமிட்டும் பலாத்காரமாகவும் மதம் மாற்றப்பட்டுக் கொண்டும், அந்நிய கலாச்சரரங்களுக்கு அடிமைப்படுத்தப்பட்டுக் கொண்டும் இருக்கின்றார்கள்.

இதற்கெல்லாம் இந்த மேற்கத்தியவாதிகளின் திட்டமிட்ட செயல்கல்தான் காரணம் என்று இலகுவாக கூறிவிடுகின்றோம். உண்மையில் அவர்களை மட்டும் காரணம் காட்டி நாம் நழுவி விட முடியாது. உலக மக்கள் தொகையில் 150 கோடியைத் தாண்டியிருக்கும் முஸ்லிம்களுடைய ஊடகத்துறை மீதான பங்களிப்பு வெறுமனே 10 சதவீதத்துக்கும் குறைவாகவே காணப்படுகின்றது. ஆனால் 15 மில்லியனுக்கும் குறைவாக வாழ்கின்ற யூதர்கள் ஊடகத்துறையை தமது கைகளுக்குள் அடக்கி வைத்திருக்கின்றார்கள். உலகத்திலுள்ள மொத்த ஊடகங்களில் 25 சதவீதமானவை இன்று யூதர்களுக்கு சொந்தமானதாகவே காணப்படுகின்றன.  அதேபோல அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலுள்ள ஊடகங்களில் 50% அதிகமானவை யூதர்களுடையதாகவே இருக்கின்றன.

இவ்வாறு ஊடகத்துறையில் முஸ்லிம்கள் பின்தள்ளப்படுவதற்கு காரணங்கள் என்ன என்று பார்த்தால், முதலாவது ஊடகம் என்றால் என்ன என்பதில் பூரண தெளிவில்லாமல் இருக்கின்றார்கள். நவீன ஊடகங்கள் முஸ்லிம்களை தவறாக வழிநடத்திச் செல்கின்றது, இதனால் முஸ்லிம் சமுதாயம் சீரழிகின்றது என்று ஒதுங்குகின்றார்கள். அதேபோல் தொழில்நுட்ப வளர்ச்சியினால் நவீனக் கண்டுபிடிப்புகள் வந்தபோதெல்லாம் அதன் ஒரு பக்கத்தை மட்டும் கண்ட முஸ்லிம்கள் அதனை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ள மறுத்தனர்;. அதன் மறுபக்கத்தில் என்ன இருக்கின்றது என்பதனை அறிய முற்படவில்லை.

அதேபோல் சமூகவலைத்தளங்களை எடுத்து நோக்கினால், நம்முஸ்லிம் இளைஞர் யுவதிகள் எவ்வாறெல்லாம் சீரழிகின்றார்கள். இஸ்லாமிய பெண்கள் அந்நிய ஆடவர்களுடன் அரட்டை  அடிப்பதும், இஸ்லாமிய ஆண்கள் அந்நிய பெண்களுடன் அரட்டை அடிப்பதும் இன்று சர்வசாதாரணமாக மாறிவிட்டது. அவர்களே அவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். உண்மையில் நம்மில் ஒருசிலர் நவீன ஊடகங்களை தவறான முறையில் பயன்படுத்துவகை; கண்டு அஞ்சியே நாம் இவற்றை முழுமையாக ஒதுக்குகின்றோம். ஆகவே ஊடகத்துறையில் முஸ்லிம்களின் பின்னடைவுக்கு நமது சமூகம் இவற்றை தவறாக பயன்படுத்துவதும் பிரதான காரணமாகும்.

ஊடகங்கள் என்றால் அனாச்சாரங்களும், பித்னாக்களும் நிறைந்து காணப்படுகின்றன என்று நாம் ஒதுங்குகின்றோம். நாம் ஏன் இவற்றில் இருந்து ஒதுங்க வேண்டும். இவற்றை நாம் மாற்று வழிகளில் பயன்படுத்துவது பற்றி சிந்திக்க முற்பட வேண்டும். இவற்றை நாம் பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்தே அதனை நல்லதா கெட்டதா என்று தீர்மானிக்க முடியும். உண்மையில் நவீன ஊடகங்களால் முஸ்லிம் சமூகம் சீரழிகின்றது என்று ஊடகங்களை தவறு காண்பதை விட, இவற்றை நாம் தவறான வழிகளில் பயன்படுத்துவதால்தான் நாம் சீரழிகின்றோம் என்பது எனது கருத்து.

உண்மையில் நாம் சிந்திக்க கடமைப்பட்ட விடயம் என்னவென்றால், ஊடகத்துறையை விட்டு நாம் விலகியிருந்தால், முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிராக பரப்பப்படுகின்ற அவதூறான விடயங்களுக்கு எவ்வாறு பதிலடி கொடுப்பது? எவ்வாறு சத்தியத்தையும் உண்மையையும் உலகுக்கு எடுத்துக் கூறுவது? நாம் இவற்றை விட்டு விலகி மௌனித்திருந்தால் இஸ்லாத்தைப் பற்றி நல்லெண்ணம் கொண்டவர்கள் கூட திசைமாற காரணமானவர்களாக நாம் மாறிவிடலாம். முல்லை முல்லால்தான் எடுக்க வேண்டும் என்பது போல நாமும் அவர்களுடைய வழியிலேயே அவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும். ஏனென்றால் அநியாயக்காரன் முன்னிலையில் நீதியை எடுத்துச் சொல்வது தான் போராட்டத்தில் உயர்ந்த போராட்டமாகும் என்பது எம்பெருமானார் (ஸல்) அவர்களின் கருத்து.

ஆகவே முஸ்லிம் சமுதாயாத்தின் வளர்ச்சிக்காக காலத்தின் தேவை கண்டு ஊடகங்களை நல்ல முறையில் பயன்படுத்த முன்வர வேண்டும். ஊடகத்துறையில் பாரியதொரு புரட்சியை முஸ்லிம்களாகிய நாம் ஏற்படுத்த வேண்டும். ஊடகத்துறையில் தமக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும். முஸ்லிம்களின் கல்வித்துறை, அரசியல், மருத்துவம், தொழில்நுட்பம் அதேபோன்று இன்னும் பல நல்ல நோக்கங்களுக்கு இத்தகைய ஊடகங்களில் முஸ்லிம்களும் சரித்திரம் படைக்கவேண்டும்.


No comments:

Post a Comment

Thanks.. ur welcome